ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான புதிய திட்டங்கள் மற்றும் யோசனைகளைச் பெற்று, ஒரு சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் அவற்றை தொகுத்து, அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு முன்மொழிவதற்காக, "தேசிய அபிலாஷைகளுக்கு ஏற்ப ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு" என்ற தலைப்பின் கீழ் அறிஞர்களின் கலந்துரையாடல் ஒன்று 25.02.2025 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜானகி ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் ஜெயசேகர, கலாநிதி சாவித்ரி குணசேகர, கலாநிதி நிஹால் ஜயவிக்ரம, சட்டத்தரணி வேலுப்பிள்ளை குகனேந்திரன், வழக்கறிஞர் ஜாவிட் யூசுப், திரு. ஜயம்பதி விக்ரமரத்ன சூம் ஊடாகவும் உரையாற்றினர். வணக்கத்திற்குரிய முகுனுவடவன சித்தத்த தேரர், வணக்கத்திற்குரிய சிவ ஸ்ரீ தர்ஷக ஷர்மா குருக்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, திரு. மனோ கணேசன், திரு. ரவூப் ஹக்கீம், திருமதி. தலதா அதுகோரல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.எல். பீரிஸ், திரு. லசந்த அழகியவண்ண, எரான் விக்ரமரத்ன, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின்போது முன்னாள் சபாநாயகர் ஸ்ரீ லங்காபிமானி கரு ஜயசூரிய அவர்கள் தெரிவித்தவாறு ,
நாட்டிற்குப் பொருத்தமானதும், மக்களை ஒன்றிணைக்கக் கூடியதுமான ஒரு அரசியலமைப்பின் அவசியம் குறித்து நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க பொதுக் கருத்து உருவாகி வருகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு, நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினைகள் குறித்து நாட்டிற்கு வாக்குறுதிகளை அளித்தன என்பதை நீங்கள் நன்கு அறிவீர். தற்போதைய அரசாங்கமும், அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான தேசிய பொறுப்பைக் கொண்டுள்ளன. ஜனாதிபதி இந்த வாக்குறுதியை தெற்கு மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும் வழங்கியுள்ளார். ஒரு சிவில் சமூக அமைப்பாக, எங்களுக்கும் அதே நம்பிக்கைக மற்றும் எதிர்பார்ப்பு உள்ளன. மேலும், இதுபோன்ற முக்கியமான மாற்றங்களை உடனடியாக செயல்படுத்த முடியாது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு கால அவகாசம் தேவை. இருப்பினும், அரசாங்கம் ஒரு சரியான காலக்கெடுவை குறிப்பிட வேண்டும். மக்களை இருளில் வைத்திருப்பது நியாயமற்றதாகும்.
நாம் நிறைவேற்ற வேண்டிய இந்த தேசிய கடமைக்காகவே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தோம். 2012 முதல், இந்த நாட்டில் நீதி ஆட்சி செய்யும் ஒரு சமூகத்தை உருவாக்குவதில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். மறைந்த வணக்கத்திற்குரிய மாதுளுவாவே ஸ்ரீ சோபித தேரர் இந்த இயக்கத்தை வழிநடத்தினார். 2015 ஆம் ஆண்டில், ஸ்ரீ சோபித தேரரின் தலைமையில், எங்கள் இயக்கமும் ஜேவிபியும் சில சமயங்களில் ஒரே மேடையில் இருந்தன. அந்த நேரத்தில் அவர் இல்லாமல் அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது. அந்த நேரத்தில் விஷம் கொடுத்து, வாகன விபத்தில் கொலை செய்ய, அவரது நட்பையருக்கு பங்கம் ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் சிலர் இந்த இருண்ட காலகட்டத்தை மறந்துவிட்டார்கள்.

Lanka Newsweek © 2026